உலக கிரிக்கெட் போட்டிகளில் இந்த இரு இந்திய வீரர்களின் பார்ட்னெர்ஷிப் தான் மிகவும் ஆபத்தான ஒன்று ; டேவிட் ஹசி ஓபன் டாக் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 லீக் போட்டியின் அரையிறுதி போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதியுள்ளனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளனர்.

இந்திய அணியின் விவரம் :

இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்று என்ற காரணத்தால் இந்திய அணியில் எந்த விதமான மாற்றத்தையும் ரோஹித் சர்மா ஏற்படுத்தவில்லை. ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அதே ப்ளேயிங் 11 தான் இன்றைய போட்டியிலும் விளையாட உள்ளனர்.

ப்ளேயிங் 11 : ரோஹித் சர்மா, விராட்கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரிஷாப் பண்ட், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமத் ஷமி மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியின் விவரம் :

இதுவரை இந்த இரு அணிகளும் 22 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். அதில் இந்திய கிரிக்கெட் அணி 12 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சீரியஸ் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வென்றுள்ளது இந்திய. அதனால் இன்றைய போட்டியில் யார் வெல்ல போகிறார்கள் என்பதை கணிப்பது கடினம் தான்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சற்று வலுவாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற இருவரின் விக்கெட் மற்ற அணிகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான டேவிட் ஹசி கூறுகையில் ; ” எனக்கு தெரிந்து இப்பொழுது நடைபெற்று வரும் உலக கிரிக்கெட் போட்டிகளில் விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பார்ட்னெர்ஷிப் தான் மிகவும் ஆபத்தான ஒன்று. அதுமட்டுமின்றி, ரசிகர்கள் அனைவரும் பார்த்து மகிழும் அளவிற்கு சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் டேவிட் ஹசி.”

கடந்த ஆசிய கோப்பை 2022 போட்டிகளை இருந்து சிறப்பாக விளையாடி வரும் விராட்கோலியின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, விராட்கோலி மற்றும் சூர்யகுமார் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினால் நிச்சியமாக எதிர் அணிகளுக்கு ஆபத்தாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.