இந்த பையன் மட்டும் வழிதவறி போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ; இந்திய அணிக்கு தேவையான வீரர் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

ஐபிஎல் 2022 போட்டிகள் ஒருவழியாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. வருகின்ற 29ஆம் ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியின் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தேர்வாகியுள்ளது. இருப்பினும் நாளை நடைபெற உள்ள போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்களோ, அவர்கள் தான் இறுதி போட்டியில் குஜராத் அணியுடன் மோத உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த 10 நாட்களுக்கு பிறகு இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ.

அதனால் இந்த முறை இளம் வீரர்களுக்கும், ஐபிஎல் 2022 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளது பிசிசிஐ. அதில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மலிக் இந்திய அணியின் முக்கியமான வீரராக பேசப்பட்டு வருகிறது. அதிலும் ஐபிஎல் 2022 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் நடராஜனுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றார் உம்ரன் மலிக். அவரது அசத்தலான பவுலிங் செய்தால் காரணத்தால் அவரை தக்கவைத்து சன்ரைசர்ஸ் அணி. ஆனால் இந்த ஆண்டு மிகவும் அசத்தலான பவுலிங் செய்த காரணத்தால் இப்பொழுது இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் மொத்தம் 22 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் உம்ரன் மாலிக். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ; உம்ரன் மலிக் -ஐ தயவு செய்து அப்படி விற்றுவிட வேண்டாம்.”

“அவரை மற்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாட வையுங்கள். நிச்சியமாக அவர்களுது உறுதி உம்ரன் மலிக்கு உதவியாக இருக்கும். பயிற்சியின் போது எப்படி செய்ய வேண்டும், வேலை பளுவை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொள்வார். “

“உம்ரன் மலிக் இன்னும் சரியான லென்த் பவுலிங் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி ஸ்டம்ப் -ஐ அட்டாக் செய்ய வேண்டும். அதனால் அவரிடம் வேகமாக பவுலிங் செய்ய சொல்லுங்கள், அதுமட்டுமின்றி எந்த லென்த் இருக்க வேண்டும் என்பதையும் மறக்காமல் அவரிடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.”

“நாளுக்கு நாள் அவரது பவுலிங் மிகவும் அருமையாக தான் உள்ளது. தொடர்ந்து சரியான லென்த் மற்றும் ஸ்டம்ப் -ஐ பார்த்து வீசினால் நிச்சியமாகி அது ஏதாவது பேட்ஸ்மேனுக்கு ஆபத்தாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி. அனைவரும் சொல்வது போல உம்ரன் மலிக் , இந்திய அணிக்கு தேவையான பவுலரா ? இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here