இனிமேல் நான் இந்த போட்டிகளில் விளையாட போவதில்லை ; ரோஹித் சர்மா உறுதி ; ரசிகர்கள் வருத்தம் ;

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

அதில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதி விளையாடி வருகின்றனர். அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

ரோஹித் சர்மா கேப்டன்ஷி :

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தி வருகிறார் ரோஹித் சர்மா. இதுவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதனால் இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏனென்றால் ஆசிய கோப்பையில் சூப்பர் 4 லீக் சுற்றில் தகுதி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி வெளியேறியது. அதனை அடுத்து அரையிறுதி போட்டிவரை முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியது.

சமீப காலமாகவே டி-20 தொடரில் விளையாடாமல் இருக்கும் ரோஹித் சர்மா :

டி-20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான நிலையில் வெளியேறியது இந்திய. அதனால் மூத்த வீரர்களுக்கு இனிமேல் டி-20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க கூடாது என்று பல கேள்விகள் எழுந்தது. அதனை தொடர்ந்து டி-20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடாமல் வந்தது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இதனை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் : “எனக்கு தெரிந்து இந்த ஆண்டு மொத்தம் 6 டி-20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. அதிலும் மூன்று போட்டிகள் மட்டுமே மிதமுள்ளது. அதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வரை வீரர்களை கண்காணிக்க வேண்டும். பின்பு ஐபிஎல் தொடர்க்கு பிறகு என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம். ஆனால் இதுவரை நான் டி-20 போட்டிக்கான தொடரில் விடைபெற வேண்டுமென்று யோசிக்கவே இல்லை.”

“கடந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் மோசமான நிலையில் வெளியேறியதால் ஒன்று முடிவு செய்தேன், இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இருக்கிறது என்று. அதற்கு இடையே பல போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் ஒரு வீரரால் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி கொண்டே இருக்க முடியாது. வேலை சுமை அதிகமாக இருப்பதால் வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளது ரோஹித் சர்மா.”