வீடியோ ; இப்படியெல்லாம் பேட்டிங் செய்வீர்களா ? அதுவும் பின்னாடி அடித்த ஷாட் தான் Highlight ஆன விஷயம் ;

0

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட்டை அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்யத முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றாலும் நிதானமாகவே விளையாடி கொண்டு வந்தனர். பின்னர் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரின் விக்கெட்டும் இழந்த நிலையில் இந்திய அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

ஆனால் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் ரன்களை விளாசினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணியால் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 307 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் ஷிகர் தவான் 72, சுப்மன் கில் 50, ஸ்ரேயாஸ் ஐயர் 80, ரிஷாப் பண்ட் 15, சூர்யகுமார் யாதவ் 4, சஞ்சு சாம்சன் 36, வாஷிங்டன் சுந்தர் 37*, தாகூர் 1 ரன்களை அடித்துள்ளார்.

பின்பு 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களான பின் அலென் மற்றும் டேவன் கான்வே எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கேப்டன் மற்றும் டாம் லத்தம் ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் நியூஸிலாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளனர். ஆமாம் 47.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 309 ரன்களை அடித்து இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.

இதில் பின் அலென் 22, டேவன் கான்வே 24, கேன் வில்லியம்சன் 94*, டேரில் மிச்சேல் 11, டாம் லத்தம் 145* ரன்களை அடித்துள்ளனர். அதனால் 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் கடந்த 5 (ஒருநாள்) போட்டியில் இந்திய அணி தோல்வியை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

பட்டைய கிளப்பிய தமிழன் :

நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர் மற்றும் ஆல் – ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றிருந்தார். சரியாக சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்த பிறகு பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவர் எங்க அடிக்க போகிறார் என்று நினைத்த நியூஸிலாந்து அணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. ஆமாம், 16 பந்தில் 37 ரன்களை விளாசினார். அதிலும் குறிப்பாக 49வது ஓவரில் மேட் ஹென்றி ஓவரில் 4,4,6 என்ற தொடர்ந்து பவுண்டரிகளை விளாசினார் வாஷின்டோன் சுந்தர். அதுமட்டுமின்றி, சூரியகுமார் யாதவை போல அனைத்து திசையிலும் அவர் அடித்த ரன்கள், இப்பொழுது கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here