தோனி இல்லை : இரு முக்கியமான வீரர்கள் சென்னை அணியில் சேர்ந்தனர் ; ரசிகர்கள் உற்சாகம் ;

ஐபிஎல் 2023: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆன ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல்.

அதுமட்டுமின்றி, 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 16 சீசனில் அடியெடுத்து வைக்க போகிறது ஐபிஎல் டி-20 லீக் தொடர். அதுமட்டுமின்றி இரு வருடங்களுக்கு பிறகு அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாட போவதால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுவும் 16.5 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளனர்.

அதனால், நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் அதிகமாக இருக்கிறது என்று தான் அர்த்தம். அதுமட்டுமின்றி, முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார் போன்ற வீரர்கள் இருப்பதால் இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கலாம்..!

சென்னை அணியில் இணைந்த இங்கிலாந்து வீரர்கள் :

இன்னும் ஒரு வாரங்களில் ஐபிஎல் 2023 போட்டி தொடங்க இருக்கிறது. அதனால் அனைத்து வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் நேற்று தான் அணியில் இணைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மார்ச் 31ஆம் தேதி மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளனர். இந்த போட்டி அகமதாபாத்-ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இருக்கிறது.