சுப்மன் கில்-க்கு பதிலாக இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க பா..! ; ஹர்டிக் பாண்டியாவிற்கு ரசிகர்கள் கோரிக்கை ;

கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கியது இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர். இதுவரை நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர்.

அதனால் இன்று ராஜகோட்-ல் நடைபெற உள்ள மூன்றாவது டி-20 போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் விளையாட உள்ளனர். ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றுமா ? இல்லையா ?

இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் ?

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம், ப்ளேயிங் 11ல் சரியான வீரர்களை தேர்வு செய்யாதது தான் முக்கியமான காரணம்.

உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் டி-20 போட்டிகளில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடும் வீரர்களுக்கு தான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் அப்படியா நடக்கிறது ?

கடந்த இரு ஆண்டுகளாவே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றாலும், ப்ளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கொடுப்பதே இல்லை.

ஹர்டிக் பாண்டிய மட்டுமின்றி ரோஹித் சர்மாவும் ருதுராஜ்-க்கு வாய்ப்பு கொடுக்கப்பதே இல்லை. இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் தொடக்க வீரரான சுப்மன் கில் இரு போட்டிகளில் விளையாடிய 5, 7 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இதற்கு ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றால் நிச்சியமாக தொடக்க ஆட்டம் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பாக அமையும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷானும், ஹர்டிக் பாண்டிய மற்றும் சுப்மன் கில்-லும் ஒரே அணி என்றதால் அவர்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறதா ?

இப்படி செய்வதால் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறதா ?