இது நடந்தால் தான் இந்திய கிரிக்கெட் அணியால் பாகிஸ்தான் அணியை வெல்ல முடியும் ; என்ன செய்ய போகிறது இந்திய ?

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரு அணிகளும் 11 சர்வதேச டி-20 போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 8 போட்டியிலும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

அதனால் இன்றைய போட்டியில் யார் வெல்ல போகிறார் என்ற எதிர்பார்த்து ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று மதியம் 1 மணியளவில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தை பொறுத்தவரை டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தான் தேர்வு செய்யும்.

அதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்ய அணி தான் போட்டியில் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி இல்லாவிட்டால் முதலில் பேட்டிங் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து எதிரணிக்கு சவாலாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கடினம் தான்.

இந்திய அணிக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை :

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் பசூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதற்கு முக்கியமான காரணம் மோசமான பவுலிங் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தொடர்ந்து ரன்களை விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.

அதனால் தான் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. அதே போல தான் இந்த உலகக்கோப்பை போட்டியிலும் சரியாக பவுலிங் செய்து ரன்களை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் நிச்சியமாக இந்திய அணி 250 ரன்களை அடித்தாலும் பயனில்லை.

ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற முன்னணி பவுலர் மற்றும் ஆல் – ரவுண்டர் இல்லாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவு தான். என்ன செய்ய போகிறது இந்திய ? ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது…! 11 பேர் கொண்டே இந்திய உத்தேச அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமத் ஷமி, அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் பாக்கிஸ்தான் அணியும் ரிஸ்வான் ஆகிய இரு வீரர்களும் அதிரடியாக விளையாட அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாகவே இந்திய அணியில் மிடில் ஆர்டர் வலுவாக இருக்க சூர்யகுமார் யாதவ் முக்கியமான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரரான முகமத் ரிஸ்வானின் பேட்டிங் அதிரடியாக இருப்பதால் இந்திய அணிக்கு ஆபத்தாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை வெல்லுமா இந்திய ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here