உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது ;

நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற 14வது போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், ரஹ்மானுல்லாஹ் குர்பஸ் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தனர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். அதே சமையத்தில் ரன்களையும் அடிக்க முடியாமல் போனது. இறுதியாக 19.4 வரை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 112 ரன்களை அடித்தனர்.
அதில் சாசய் 7, குர்பஸ் 10, இப்ராஹிம் 32, உஸ்மான் கனி 30 ரன்களை அதிதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 113 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியை போலவே நிதானமாக விளையாடி கொண்டு இருந்த இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் தான் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 113 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றது.

சென்னை வீரரின் சாதனை :
இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குட்டி பையன் என்று அழைக்கப்படும் சாம் கரன் இங்கிலாந்து அணியின் ஆல் – ரவுண்டராக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த சாம் கரண் 3.4 ஓவரில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் 5 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 14வது போட்டிக்கான ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் என்ற படத்தையும் பெற்றுள்ளார் சாம் கரன். இவர் ஐபிஎல் டி-20 போட்டிகளில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். அதிலும் குறிப்பாக 2020ஆம் ஆண்டு இவரது பங்களிப்பு சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது தான் உண்மை. நேற்று நடந்து முடிந்த போட்டிக்கு பிறகு பேசிய சாம் கரன் கூறுகையில் ; ” எங்களுக்கு நன்கு தெரியும் உலகப்புகழ்பெற்ற சூழல் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி தான் விளையாடி வருகின்றனர் என்று.”

“முதல் போட்டியில் வென்றது சிறந்த விஷயமாக தான் இருக்கிறது. அனைத்து அணிகளும் எந்த அணியை வேண்டுமானாலும் வெல்ல முடியும். இன்றைய போட்டியில் வென்ற நம்பிக்கையுடன் இனிவரும் போட்டிகளில் விளையாடுவோம். என்னதான் அதிக நேரம் பயிற்சி செய்தாலும் அதிகப்படியான போட்டிகளில் விளையாடுவது போல இருக்காது என்று கூறியுள்ளார் சாம் கரண்.”
இங்கிலாந்து அணி 2 புள்ளிகளுடன் +0.620 என்ற ரன் ரெட் உடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments