நான் பேட்டிங் செய்ய Pitch – க்கு வந்தால் என்னிடம் எப்போதும் மேக்ஸ்வெல் இதை சொல்லுவர்… ; டிவில்லியர்ஸ் …!

நான் பேட்டிங் செய்ய Pitch – க்கு வந்தால் என்னிடம் எப்போதும் மேக்ஸ்வெல் இதை சொல்லுவர்… ; டிவில்லியர்ஸ் …!

2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 போட்டி சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை விளாசியுள்ளார். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்கள், டுபலஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், அம்பதி ராயுடு 14 ரன்கள், ஜடேஜா 62 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆர்.சி.பி அணி தோல்வியை தான் சந்தித்துள்ளது.

ஆர்.சி.பி அணிக்கு முதல் சில ஓவரில் நல்ல ரன்களை எடுத்தாலும், அதன்பின்னர் தொடர்ந்து விக்கெட் இழந்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 122 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. அதனால் ஆர்.சி.பி அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. வெற்றியை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் முதல் இடத்திலும், பெங்களூர் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில் ; நாங்கள் எங்களது முழு உழைப்பையும் கட்டியுள்ளோம். ஆனால் இதுவரை நடந்த 5 போட்டியில் 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். அது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் எப்போது மேக்ஸ்வெல் -ளுடன் இணைந்து பேட்டிங் செய்தாலும் அவர் என்னிடம் இதை சொல்லுவர்.

அதிகமாக ரன்களை ஓடி எடுக்க வேண்டாம். பவுண்டரி மட்டும் அடிக்க முயற்சி செய்யலாம் என்று மேக்ஸ்வெல் என்னிடம் சொல்லுவர் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இதுவரை 5 போட்டியில் 129 ரன்களை அடித்துள்ளனர், அதில் 76 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.