IND vs ENG 2021: நேற்று புனே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் உள்ளனர். நாழி நடை பெற உள்ள இறுதி ஒருநாள் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.
இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 336 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 337 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர் 337 ரன்களை எடுத்து இந்திய அணியை வீழ்த்தியது. அதனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் நாளை மதியம் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் யார் வெல்கிறார்களோ !! அந்த அணியே தொடரை கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Also Read : மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனவா …? அதிர்ச்சியில் ரசிகர்கள் ; முழு விவரம்
விராட் கோலி சொன்ன அறிவுரையால் தான் கே.எல்.ராகுல் இப்படி செய்திருப்பார் ; முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர்…!
நேற்று நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் அசத்தலான ஆட்டத்தை விளையாடியுள்ளார். 114 பந்தில் 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். கே.எல்.ராகுல் நினைத்திருந்தால் அதிரடியாக விளையாடி இருக்கலாம்.
கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியின் பார்ட்னெஷிப்பில் விராட் கோலி பொறுமையாக விளையாடு நீண்ட நேரம் எடுத்துக்கொள் என்று சொல்லிருக்கலாம். அதனால் தான் முதல் அரைசதம் அடிக்க 66 பந்துகள் எடுத்து கொண்டார்.
என்னை பொறுத்தவரை கே.எல்.ராகுலுக்கு அதிரடியாக விளையாடும் திறன் அதிகம் உள்ளது. அவரது முதல் அரைசதத்துக்கு பிறகுதான் முதல் சிக்சர் அடித்துள்ளார். இதற்கு காரணம் கோலியின் அறிவுரையாக கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.