இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். அதிலும் நேற்று பயிற்சி ஆட்டம் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.


அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. சுமன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் 20 ரன்களை அடித்த நிலையில் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதுமட்டுமின்றி, சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறியது இந்திய அணி.
முதல் நாள் முடிவில் 60.2 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 246 ரன்களை அடித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதில் ரோஹித் சர்மா 25, சுமன் கில் 21, ஹனுமா விஹாரி 3, விராட்கோலி 33, ஸ்ரேயாஸ் ஐயர் 0, ரவீந்திர ஜடேஜா 13, ஸ்ரீகர் பாரத் 70, ஷர்டுல் தாகூர் 6, உமேஷ் யாதவ் 23 மற்றும் ஷமி 18 ரன்களை அடித்துள்ளனர்.


அதுமட்டுமின்றி, எதிர் அணியின் பவுலர் வில் டேவிஸ் 2, பிரஷித் கிருஷ்ணா 1, ரோமன் வாழ்க்கர் 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில், தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி செய்த செயல் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தான் இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் பேட்டை தனியாக நிற்கும் படி வைத்தது இணையத்தை வைரலானது.
அதனை நினைவில் வைத்து கொண்டு விராட்கோலி, அவரது பேட்டை நிற்க வைக்க பல முயற்சிகளை கையில் எடுத்தார். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. வீடியோ ;
After Joe roots magic which was seen on the pitch by balancing the bat @imVkohli trying the same 😂 pic.twitter.com/TUZpAUJSA1
— Yashwanth (@bittuyash18) June 23, 2022