ஒருவேள இருக்குமோ…! இந்திய அணியில் இவர் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதா ?

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் வென்றுள்ளனர்.

ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஆமாம் நேற்று காலை இண்டோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது.

அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். ஆனால் தொடக்க வீரர்களில் இருந்து யாரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் திணறியது இந்திய.

அதனால் வெறும் 31.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி 109 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 12, சுப்மன் கில் 21, விராட்கோலி 22, ஸ்ரீகர் பாரத் 17 மற்றும் அக்சர் பட்டேல் 12 ரன்களை அடித்துள்ளனர்.

இவர் அணியில் இல்லாதது தான் இந்திய அணியின் மோசமான நிலைமைக்கு முக்கியமான காரணமா ?

முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை வென்று வருகிறது இந்திய.

ஆனால் கடும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்த காரணத்தால் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில் அணியில் இடம்பெற்றார். ஆனால் அதில் பெரிய அளவில் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் சுப்மன் 21 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார்.

இரண்டாவது நாளில் பேட்டிங் வரும் ஆஸ்திரேலியா அணி 160 ரன்களை அடித்துள்ளார். அதாவது 51 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா. விரைவாக மீதமுள்ள 6 விக்கெட்டையும் கைப்பற்றவில்லை என்றால் இந்திய அணியால் வெல்வதில் சிரமம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here