நான் மட்டும் கேப்டனாக இருந்தால் இவரை நிச்சியமாக அணியில் எடுத்திருப்பேன் ; ஆனால் ரோஹித் ? ; மைக்கல் கிளார்க் பேட்டி ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து இன்று காலை 9:30 மணியளவில் இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது மூன்றாவது டெஸ்ட் போட்டி. அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்-ம் மோதின.

முதல் நாள் விவரம் :

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அது ஆபத்தாக மாறியது. ஏனென்றால், அதிரடியாக விளையாடி ரன்களை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கு ஆபத்தாகத்தான் நடந்தது.

ஆமாம், தொடக்க வீரரான ரோஹித் சர்மா 12, சுப்மன் கில் 21 ரன்களையும் அடித்தனர். பின்பு களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

சரியாக 33.2 ஓவர் முடிவிலே அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி 109 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 12, சுப்மன் கில் 21, புஜாரா 1, விராட்கோலி 22, ரவீந்திர ஜடேஜா 4, பாரத் 17 ரன்களை அடித்துள்ளனர்.

இந்திய அணியின் பின்னடைவுக்கு பேட்டிங் தான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் இந்த நேரத்தில் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக்கல் கிளார்க்.

இதனை பற்றி கூறுகையில் : “எனக்கு கே.எல்.ராகுலை மிகவும் பிடிக்கும். சிறந்த இளம் வீரர் என்றால் அவர் தான். இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது போட்டிகளில் வென்று கொண்டு தான் வருகிறது. பிறகு ஏன் அவரை (கே.எல்.ராகுல்) அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இப்பொழுது ராகுல் பெரிய அளவில் ரன்களை அடிப்பது இல்லை தான். இருந்தாலும் நிச்சியமாக நான் அவர் அணியில் இருக்க வேண்டுமென்று தான் சொல்வேன்.”

“கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமின்றி, நிச்சியமாக அவர் கடுமையாக பயிற்சி செய்து கம்பேக் கொடுப்பார். போர்ம் என்றால் என்ன ? நீண்ட காலமாகவே போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது தான். அப்படி கே.எல்.ராகுல் இந்திய அணியின் சிறந்த வீரர் என்றால் கொஞ்சம் ஆவது நம்பிக்கை வைக்க வேண்டும்.”

“ஒரு சில போட்டிகளில் நம் நினைத்த விஷயங்கள் நடைபெறுவது சிரமம் தான். அதனால் கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார் மைக்கல் கிளார்க்.”

கே.எல்.ராகுலுக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இளம் வீரரான சுப்மன் கில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். இதற்கு கே.எல்.ராகுல் அணியில் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here