வீடியோ : பா…! செம பவுலிங் ; ஸ்டம்ப்-ஐ தெறிக்கவிட உமேஷ் ; வாயடைத்து போன ஆஸ்திரேலியா ரசிகர்கள் ;

0

இண்டோர் : நேற்று காலை ஹோல்கர் மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதி விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி தொடரில் முன்னிலையில் இருக்கின்றனர். இருப்பினும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு ஆபத்தாக மாறியுள்ளது. அப்படி என்ன நடந்தது ?

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதிக ரன்களை அடித்து ஆஸ்திரேலியா அணிக்கு சவாலான டார்கெட் செட் செய்ய அனைத்து முயற்சியும் செய்தனர்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான பேட்டிங் அமைந்த காரணத்தால் இந்திய அணிக்கு எதிராக மாறியுள்ளது. ஆமாம், தொடக்க வீரர்களில் இருந்து அனைத்து வீரர்களும் குறைவான ரன்களை அடித்து ஆட்டம் இழந்தனர்.

வெறும் 31.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி வரும் 109 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தனர்.

இருப்பினும் இறுதி நேரத்தில் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வருகிறது ஆஸ்திரேலியா. 75.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 197 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இந்திய அணியை விட 88 ரன்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

வீடியோ :

இதற்கிடையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பந்து இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. சரியாக 73.3 ஓவரில் உமேஷ் யாதவ் பவுலிங்-ஐ எதிர்கொண்டார் ஸ்டார்க். அப்பொழுது ஸ்விங் செய்த காரணத்தால் போல்ட் அவுட் ஆனார் ஸ்டார்க்.

அதுமட்டுமின்றி, இது உமேஷ் யதாவுக்கு 100 விக்கெட் ஆகும். அதுமட்டுமின்றி சிறப்பாக பவுலிங் செய்த உமேஷ் யாதவ் வெறும் 5 ஓவரில் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் உமேஷ் யாதவ்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here