நேற்று ஐபிஎல் 2020யின் 20வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான டி காக் 23 ரன்கள் , ரோஹித் சர்மா 35 ரன்களை எடுத்தும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் விளையாடிய சூர்யா குமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 47 பந்தில் 79 ரன்களை எடுத்துள்ளார். 20 ஓவர் முடிவில் 193 ரன்களை எடுத்துள்ளனர் மும்பை இந்தின்ஸ் அணி வீரர்கள்.
194 எடுத்த வெற்றி என்று இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்களை பறிகொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 136 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களை பறிகொடுத்து. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஜய்ஸ்வால் 0 ரங்களிலும் , பட்லர் 70 ரங்களிலும் , கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரங்களிலும் , சஞ்சு சாம்சன் 0 ரன்களை எடுத்தும் அவுட் ஆகிவிட்டனர்.
அடுத்தடுத்து விக்கெட் போனதால் 18.1 ஓவரில் வெற்றியை கைப்பற்றியது மும்பை இந்தின்ஸ் அணி.
ஐபிஎல் வீரருக்கு 12லட்சம் அபராதம்!!! யார் அந்த வீரர் எதற்காக இந்த அபராதம்…..!
முதலில் பௌலிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் கொடுத்த நேரத்தை பயன்படுத்தி சரியான பௌலிங் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் பௌலிங் செய்யும்போது தாமதம் ஏற்பட்டதால் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.