என்னடா..! பண்ணிட்டு இருக்கீங்க..! ஊக்கம் மருந்தை பயன்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ; சேத்தன் சர்மா ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளரான சேத்தன் சர்மா வெளியிட்டுள்ள தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்ன என்ன விஷயங்களை பதவிசெய்துள்ளார் ? சேத்தன் சர்மா ; “விராட்கோலி மற்றும் ரோஹித்சர்மா ஆகிய இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் ரோஹித் ஷர்மாவிற்கு முன்பு விராட்கோலி கேப்டனாக இருந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே ஈகோ ஏற்பட்டுள்ளது உண்மை” சேத்தன் சர்மா.

“அதுமட்டுமின்றி, அனைத்து விதமான போட்டிக்கான தேர்வு முன்பு பிட்னெஸ் தேர்வு நடைபெறும் அதில் தேர்வாகும் வீரர்களுக்கு தான் அணியில் முன்னுரிமை கொடுக்கப்படும். அதிலும் 80 % முதல் 85% சதவீதமான வீரர்கள் பிட்னெஸ் டெஸ்ட்-ல் பாஸ் ஆக ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளனர்.” சேத்தன் சர்மா.

“ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக கங்குலி இருந்தது இல்லை, ஆனால் கங்குலி-க்கு விராட்கோலியை பிடிக்காது என்பது தான் உண்மை.” சேத்தன் சர்மா.

ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி-க்குள் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை காரணமாக விராட்கோலி அழுத்தம் தாங்க முடியாமல் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனை தடுக்கும் வகையில் கங்குலி பல முறை வேண்டாம் நீயே (விராட்கோலி) கேப்டனாக இரு என்று கூறினார். ஆனால் விராட்கோலி அதனை கண்டுகொள்ளாத நிலையில் உடனடியாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள்.” சேத்தன் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here