சீனியர் ப்ளேயர் ஆக இருந்து கொண்டு அஸ்வின் பேட்டிங் செய்கின்ற அளவிற்கு கூட இவங்க இரண்டு பெரும் பேட்டிங் செய்யவில்லை ; கடுப்பான ரசிகர்கள்

0

அதிக அனுபவம் கொண்ட வீரர்களாக இருந்து கொண்டு இப்படி பேட்டிங் செய்தால் எப்படி ?? இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கடுப்பான ரசிகர்கள் ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

நேற்று மதியம் 1:30 மணியளவில் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதில் இந்திய அணி 202 ரன்கள் அடித்த நிலையில் ஆல்- அவுட் ஆனார்கள். பின்னர் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 1 விக்கெட் இழந்து 35 ரன்களை அடித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரும் முன்பு போல் இப்பொழுது பேட்டிங் செய்வதே இல்லை. அதுமட்டுமின்றி முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ரஹானே 68 ரன்களையும், புஜரா 16 ரன்களை அடித்தனர். பின்னர் நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்-ல் ரஹானே 0 ரன்கள் எடுத்த நிலையில், புஜரா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளனர்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணத்தால் 202 ரன்கள் அடித்த நிலையில் இந்திய அணி தென்னாபிரிக்கா அணியிடன் அனைத்து விக்கெட்டையும் பறி கொடுத்தது. இவர்கள் இருவரை விட சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது முதல் இன்னிங்ஸ்-ல் 46 ரன்களை அடித்துள்ளார். அதனால் ரசிகர்கள் ரஹானே மற்றும் புஜரா மேல் கோவமாக உள்ளனர். அதனை சமுகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ரஹானேவுக்கு அவ்வப்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இருந்தாலும் சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தாலும் அதனை சரியாக பயன்படுத்தாமல் ஆட்டம் இழந்து விடுகிறார் ரஹானே. இதே போல தொடர்ந்து விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ரஹானே இப்படி பேட்டிங் செய்வது அவருக்கு ஆபத்தாக தான் முடியும் என்று தெரிகிறது. இதற்கு மேல் ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரும் இந்திய டெஸ்ட் அணியில் இருக்க வேண்டுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க.. !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here