தோனி, கோலி கிடையாது ; ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு போன வீரர் இவர் தான் ; அதிர்ச்சியில் ரசிகர்கள் ;

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் இந்தியாவில் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் 17வைத்து சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அதனால் அனைத்து வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக விளையாடி வாங்கும் சம்பளத்தை காட்டிலும் ஐபிஎல் டி-20 போட்டியில் அதிக வருமானத்தை கொடுக்கும் என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, இந்திய அணியில் விளையாடும் வீரர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை சம்பளம் கொடுப்பது தான் வழக்கம்.

ஆனால், வெறும் 3 மாதங்கள் மட்டுமே விளையாடி வரும் ஐபிஎல் போட்டியில் எப்பொழுதுமே சம்பளம் என்பது உயர்வு தான். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் கோடிகளில் சம்பளம் வாங்கும் பல வீரர்கள் இந்திய அணியில் பெரிய இடத்தை பிடிக்காத பல வீரர்கள் உள்ளனர் என்பது உண்மை.

இருப்பினும், ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் ஒரு முக்கியமான நட்சத்திர வீரர் விளையாடி வருகின்றனர். சென்னை அணியில் தோனி, பெங்களூரில் விராட்கோலி, மும்பை அணியில் ரோஹித் சர்மா, குஜராத் அணியில் ஹர்டிக் பாண்டிய இப்படி அனைத்து அணிகளும் பிரபலமான வீரர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இவரைகளை காட்டிலும் ஒரு வீரர் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது ஐபிஎல் அணி. அது யார் தெரியுமா ? 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விளையாடியவர் பேட் காமின்ஸ். அதனால் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி 20.04 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு மார்க்ரம் தான் ஹைதெராபாத் அணியின் கேப்டனாக விளையாடி வந்தார். ஆனால் ஆஸ்திரேலியா அணியை சிறப்பாக வழி நடத்திய காரணத்தால் இந்த ஆண்டு பேட் கம்மின்ஸ் -ஐ கேப்டனாக நியமனம் செய்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் என்னதான் பிரபலமாக இருந்தாலும் கொரோனா நேரத்தில் இந்தியாவுக்கு நன்கொடை கொடுத்து உதவியுள்ளார் காமின்ஸ்.