CSK அணியில் இனிமேல் இவர் விளையாடுவது சிரமம் தான் ; இறுதி நேரத்தில் என்ன செய்ய போகிறார் தோனி ?

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 47 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைப்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் டார்கெட் வைக்க களமிறங்கிய சென்னை சூப்பர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 189 ரன்களை விளாசினார். அதில் அதிகபட்சமாக ரூட்டுராஜ் கெய்க்வாட் சதம் அடித்துள்ளார்.

பின்பு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்ததால் !! சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.3 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது.

வெற்றியை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு அதிகமாக தான் உள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் -கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆனால் மிடில் ஆர்டர் தான் மிகவும் மோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சுரேஷ் ரெய்னா, ராயுடு ஆகிய இருவரும் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு பதிலாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கலாம்.

ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது.. அப்படி என்ன சிக்கல் ?? இவர்கள் இருவருக்கும் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. அதுமட்டுமின்றி, சுரேஷ் ரெய்னா மற்றும் ராயுடு ஆகிய இருவரும் ஐபிஎல் 2021யின் முதல் பாதி விளையாட்டில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளனர்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரன்களை அடிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால் தோனிக்கு எழுந்த மிகப்பெரிய சிக்கல். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யின் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் இந்தமுறை எப்படியாவது கோப்பையை வென்றே ஆகா வேண்டும் என்று விளையாடி வருகிறது சிஎஸ்கே.

இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. அதனால் இறுதி நேரத்தில் அணியை மாற்றினால், தோல்விகளை எதிர்கொள்ள கூடிய பாயம் ஏற்படலாம். ஆனாலும் இவர்களுது பங்களிப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது, என்ன செய்ய போகிறார் தோனி ?

சுரேஷ் ரெய்னா மற்றும் ராயுடு -வுக்கு பதிலாக யார் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? COMMENT பண்ணுங்க ..!