பும்ரா இல்லை ; குஷியில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ; பட்டைய கிளப்ப போகும் இவரது பவுலிங் ;

கடந்த ஜனவரி 27ஆம் ஆண்டு தொடங்கியது தெம்பா பவும தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் மோதின.

அதில் முதல் இரு போட்டிகளும் தென்னாபிரிக்கா அணி வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறித்தனமாக விளையாடியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

மூன்றாவது போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 346 ரன்களை அடித்தனர்.

பின்பு 347ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த தென்னாபிரிக்கா அணி 43.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 287 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதற்கு முக்கியமான காரணம் ஜோபர் அர்ச்சர் வருகை தான். 9.1 ஓவர் பவுலிங் செய்து 6 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் 40 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

குஷியில் இருக்கும் மும்பை :

ஆமாம், கடந்த ஆண்டு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிகவிலை கொடுத்து ஜோபர் அர்ச்சரை கைப்பற்றியது மும்பை. ஆனால் காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வந்துள்ளார் அர்ச்சர்.

அதனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பட்டைய கிளப்பிய அர்ச்சர் நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பும்ரா, அர்ச்சர் போன்ற முன்னணி பவுலர்கள் அணியில் இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் படத்தை வெல்ல போகும் அணி எது ? உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.