போட்டியை தாண்டி எனக்கு இதுதான் மிகவும் முக்கியமான ஒன்று ; இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக எதிர்பார்க்கலாம் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய மூன்றாவது டி-20 லீக் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், மிச்சேல் சாண்ட்டனர் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் அகமதாபாத்-ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க நாயகனான இஷான் கிஷான் மோசமான அளவில் வெறும் 1 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் சுப்மன் கில் விளையாடிய அதிரடியான விளையாட்டால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 234 ரன்களை அடித்தனர். அதில் இஷான் கிஷான் 1, சுப்மன் கில் 126, ராகுல்திருப்பதி 44, சூரியகுமார் யாதவ் 24, ஹர்டிக் பாண்டிய 30, தீபக் ஹூடா 2 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு மோசமான தோல்வி காத்திருந்தது.

ஆமாம், தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணியால் வெறும் 66 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி அதிகபட்சமாக 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “எனக்கு வெற்றியது பற்றி கவலையில்லை, இருந்தாலும் நாம் எப்படி விளையாடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நான் வாங்கிய மேன் ஆஃப் தி சீரியஸ் ,ஆற்றும் இந்திய கிரிக்கெட் வென்ற தொடரை நான் உதவியாக இருந்த ஸ்டாப்ஸ்-க்கு சமர்ப்பணம் செய்ய ஆசைப்படுகிறேன்.

நான் எப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் போது அணிக்கு என்ன தேவை என்பதை தான் முக்கியமாக கவனிப்பேன். அதனை தவிர்த்து மற்ற விஷயங்களை பார்க்கவே மாட்டேன். அதுமட்டுமின்றி, ஒரு கேப்டனாக அனைத்து விஷயங்களையும் நான் சாதாரணமாக தான் பார்ப்பேன்.

இதே மைதானத்தில் தான் நாங்க ஐபிஎல் 2022 இறுதி போட்டியில் விளையாடினோம். அப்பொழுது, இரண்டாவது பேட்டிங் தான் வெறித்தனமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், இன்றைய போட்டி அதற்கு மாறாக நடைபெற்று முடிந்துள்ளது. இனிவரும் போட்டிகளிலும் இதேபோல விளையாட முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here