இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பௌலிங் தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய இந்தியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தவான் 4 ரன்களிலும் , கே.எல்.ராகுல் 1 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அதன் பின்னர் களம் இறங்கிய இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு ரன்களை கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இந்தியா அணி 100 ரன்களுக்குள் சுருங்கி விடும் என்ற நினைத்த போது ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களை அடித்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார்.
20 ஓவர் முடிவில் 124 ரன்கள் மற்றும் 7 விக்கெட் பறிகொடுத்தது இந்தியா . அதன்பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 49 ரன்களிலும் , ஜோஸ் பட்லர் 28 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். 15.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி இந்தியா அணியை வென்றது.
டி-20 போட்டியில் இந்தியா அணியை விட இந்த ஐபிஎல் அணி சிறப்பாக இருக்கும் ; முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து.
இந்தியாவின் தோல்வி காரணத்தால் ஏன் ரோஹித் சர்மா அணியில் இல்லை ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது ஒரு பக்கம் இருக்க இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தியாவின் தோல்வியை குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா அணிக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார். அதனால் கோபம் அடைந்த இந்தியா கிரிக்கெட் ரசிகர்கக்ள் இப்பொழுது எதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியா அணியிடம் ஒப்பிடுகிறீர்கள் ? என்று அவர் மேல் பல விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.