கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பௌலிங் பயிற்சியாளர் இவர்தான்..; ஐபிஎல் 2021

0

ஐபிஎல் 2021 வருகின்ற ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல மருத்துவ பிரச்சனை வரும் என்பதனை மனதில் கொண்டு ஐக்கிய அரபு நாட்டில் எந்த ரசிகர்களும் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்தினர்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நிச்சயமாக இந்தியாவில் தான் என்ற முடிவை பிசிசிஐ கூறியுள்ளார்கள். ஆனால் முதலில் நடக்கும் சில போட்டிகளில் மக்கள் யாரும் மைதானத்துக்கு உள்ளே அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது பிசிசிஐ.

அனைத்து ஐபிஎல் அணியும் ,வருகின்ற ஐபிஎல் 2021 போட்டிக்கு தயாராகி வருகிறது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிலர் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர், முக்கியமாக நம்ம தல தோனி.

கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பௌலிங் பயிற்சியாளர் இவர்தான்..; ஐபிஎல் 2021

கிங்ஸ் XI பஞ்சாப் அணி நடந்து முடிந்த ஐபிஎல் 2021 ஏலத்தில் ஒன்பது வீரர்களை அணியில் புதிதாக சேர்த்துள்ளனர். அதில் அதிகபட்சமாக விலை ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது கிங்ஸ் XI பஞ்சாப் அணி. அதுமட்டுமின்றி எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் பஞ்சாப் அணி .

இந்த கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். பஞ்சாப் அணிக்கு புதிதாக பௌலிங் பயிற்சியாளரை தேர்வு செய்துள்ளனர். அவர் முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வீரர் டேமியன் வ்ரைட். இவர் இதுவரை 123 போட்டிகளில் விளையடியுள்ளார். அதுமட்டுமின்றி 2011 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here