கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கிய உலகக்கோப்பை டி-20 போட்டிகள் நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாபே, நியூஸிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற 12 அணிகள் விளையாடினர். இதில் குரூப் 1 பிரிவில் இருந்து இங்கிலாந்து, நியூஸிலாந்து அணியும், குரூப் 2ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பின்பு அரையிறுதி சுற்றில் இருந்து இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியனர். நேற்று நடந்த இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றுள்ளனர். ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளனர்.
டி-20 உலககோப்பை அணி :
இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ப்ளேயிங் 11 பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது..!
உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை அடித்த ரன்களில் ஒருவர் தான் விராட்கோலி. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடிய விராட்கோலி 296 ரன்களை அடித்துள்ளார். அதில் நான்கு அரை சதமும் அடித்துள்ளார் விராட்கோலி. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி ஆட்டம் இழக்காமல் 82* ரன்களை விளாசியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் நம்பிக்கையான மிடில் ஆர்டரில் களமிறங்கி ரன்களை அடித்து விளாசியுள்ளார். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் மொத்தம் 239 ரன்களை அடித்துள்ளார். இவரை அடுத்து ஹர்டிக் பாண்டிய, குறிப்பாக செமி -பைனல் போட்டியில் நம்பிக்கையான வீரர்கள் பலர் ஆட்டம் இழந்தாலும் ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது தான் உண்மை.
இந்த உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடி உள்ளனர். அதனால் இந்த மூன்று வீரர்களின் பெயர் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான அணியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான அணி :
அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), விராட்கோலி (இந்தியா), சூர்யகுமார் யாதவ் (இந்திய), க்ளென் பிலிப்ஸ்(நியூஸிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாபே), ஷதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கரன் (இங்கிலாந்து), நோர்ட்ஜெ (தென்னாபிரிக்கா), மார்க் வுட் (இங்கிலாந்து), ஷாஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) மற்றும் ஹர்டிக் பாண்டிய (இந்தியா)