கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகள் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்றது. அந்த ஆண்டு 2020ஆம் ஆண்டு கோப்பையை மும்பை இண்டியன்ஸ் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய மோசமான விளையாட்டு என்றே சொல்லாமல். ஏனென்றால் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.
இதனால் சென்னை அணியின் தொடர் தோல்விக்கு கெதர்ஜாதவ் மற்றும் தோனியின் தான் காரணம் என்று பலர் கூறியுள்ளனர். தொடர் தோல்வியால் பல முறை அணியின் வீரர்களை மாற்றி விளையாடிய தோனிக்கு நேர்ந்தது சோகமே.
அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியன் முக்கியமான வீரர் ரெய்ன மற்றும் சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் 2020யில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் மீண்டும் அடுத்த ஆண்டு சிறப்பாக விளையாடும் என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இனி இந்த வீரர்களுக்கு சிஎஸ்கே அணியில் இடமே கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி …. யார் அந்த வீரர்கள்.?
இந்த ஆண்டு வீரர்களுக்கான ஏழாம் வருகின்ற பிப்ரவரி மாதம் நடக்க போவதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி சென்னை அணியின் முக்கியமான சில வீரர்களை நிச்சியமாக வெளியேற்றுவதாக தகவல்கள் வெளியானது. அதில் கெதர் ஜாதவ், ரெய்ன , ஹர்பஜன் சிங் நிச்சியமாக வெளியேறுவது உறுதி.
அதோட பியுஷ் சாவ்லா மற்றும் கரன் சர்மா வெளியேற அதிகம் வாய்ப்பு உள்ளதாக சென்னை அணியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நல்ல வீரர்களை அணியில் எடுக்க முடியும். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சிலர் சந்தோசத்திலும் சிலர் சோகத்திலும் உள்ளனர்.