இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய பேட்ஸ்மேன். கிரிக்கெட் விளையாட்டில் முதல் முதலில் 100 சதங்களை அடித்துள்ளார். இவர் ஒருத்தரே இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து வந்த Road Safety World Series போட்டிகளில் நடந்து வந்தன.
நேற்று நடந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதினார். அதில் டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கியா சேவாக் 10 ரன்களிலும் , சச்சின் டெண்டுல்கர் 30 ரன்களிலும் , பத்ரிநாத் 7 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
அதன்பின்னர் பேட்டிங் செய்த யூசப் பதான் ஆட்டம் இழக்காமல் 60 எடுத்துள்ளார். அவருடன் இணைந்து யுவராஜ் சிங் 60 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 181 ரன்களை எடுத்துள்ளது இந்தியா லிஜெண்ட்ஸ் . 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய ஸ்ரீலங்கா லிஜெண்ட்ஸ் இறுதிவரை போராடி 167 ரன்களை மட்டுமே அடித்துள்ளதால் கோப்பையை வென்றது இந்தியா லிஜெண்ட்ஸ் அணி.
சச்சின் டெண்டுல்கரை கிண்டல் செய்த யுவராஜ் சிங் ; வைரலாகும் பதிவு…..!
சச்சின் டெண்டுல்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் ஒரு விடியோவை பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் பிரைன் லாரா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
ஹெல்மெட் அணிவது மிகவும் முக்கியம் என்று சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு செய்துள்ளனர் சச்சின் டெண்டுல்கர். அதனை கிண்டல் செய்யும் வைகையில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் ஆஸ்கார் நாமினேஷன் என்று சச்சின் டெண்டுல்கர் ட்வீட்-க்கு பதிலளித்துள்ளார் யுவராஜ் சிங்.