இந்த ஆண்டு ஐபிஎல் 2021 வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் சந்தோஷத்தில் முகியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது.
அதுவும் எந்த ரசிகர்களும் இல்லாமல் நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசன் அது என்றே சொல்லலாம். ஆனால் கொரோனா தாக்கம் ஜனவரி மாதத்தில் சற்று தாக்கம் குறைந்ததால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தது பிசிசிஐ.
ஆனால் ரசிகர்கள் 50% சதவீதம் மட்டுமே போட்டியை பார்க்க முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சிலபேர் சந்தோஷத்திலும் சிலபேர் சோகத்திலும் மூழ்கினார். இந்த ஆண்டு 2021 ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியானது. ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியுள்ளது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி. அதுவும் சென்னை உள்ள மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளது.
ஐபிஎல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி… !! அடபோங்கடா நீங்களும் உங்க ஐபிஎல்லும் ..
இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக உள்ளதால் இப்பொழுது மீண்டும் பல மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதல் சில போட்டிகளில் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் யாரும் மைதானதுக்கு சென்று பார்க்கும் அனுமதி இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எப்போதுதான் நங்கள் பழைய மாதிரி ஐபிஎல் போட்டியை மைதானத்தில் பார்க்க முடியும் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர்.
அது ஒருபக்கம் இருக்க மும்பையில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த ஆண்டு அங்கு எந்தவிதமான போட்டியும் நடைபெறாது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.பஞ்சாப் அணிக்கு ஹாம் மைதானம் என்றல் அது மொஹாலி தான், அங்கும் எந்த விதமான போட்டியும் நடக்காது என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இதனை பார்த்த பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பஞ்சாப் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இனி வரும் முக்கியமான பேச்சுவார்த்தையில் இதனை நாங்கள் பார்க்கிறோம் என்று பிசிசிஐ கூறியுள்ளது.