இந்தியாவில் இவங்க இருவர் இருக்கும்வரை பாகிஸ்தான் பவுலரான ஷாஹீன் அப்ரிடி கண்டு பயப்பட தேவையில்லை ; முன்னாள் வீரர் உறுதி

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர்.

அணிகளின் விவரம் இதோ :

ஆசியாவில் இருக்கும் சில நாடுகள் மட்டும் தான் இதில் பங்கேற்க முடியும். அதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில், ஐக்கிய அரபு, குவைத், ஹாங் காங் மற்றும் சிங்கப்பூர் அணிகளில் ஏதாவது ஒரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு அணிதான் 6வது இடத்தில் இடம்பெறும்.

அதனால் மொத்தம் 6 அணிகளை கொண்டு ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் பலர் எதிர்பார்த்த படி தான் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான நிலையில் தோல்வியை கைப்பற்றியது இந்திய. அதுவும் பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் அப்ரிடியின் அதிரடியான பந்து வீச்சுதான் முக்கியமான காரணம். அதேபோல தான் இந்த ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் வருகின்ற 28ஆம் தேதி அன்று மோத உள்ளனர்.

எப்பொழுது ஒரு போட்டி நடைபெற்றால் அணியை பற்றியும் அல்லது தனி ஒரு வீரரை பற்றி கருத்து சொல்வது வழக்கம் தான். அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் ; ” இந்த முறை பாகிஸ்தான் வீரரான ஷாஹீன் அப்ரிடி-யை கண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு தயக்கம் வேண்டாம். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற உலக சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.”

“இருப்பினும் ஷாஹீன் எப்பொழுது லென்த் மற்றும் ஸ்விங் பவுலிங் செய்வார், அதனை மட்டும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இப்படி சூழ்நிலை எழும்போது உடம்பிற்கு பதிலாக பேட்டை வைத்து தடுக்க வேண்டும். அதேபோல ஷாஹீன் பவுலிங்கிற்கு எதிராக சூரியகுமார் யாதவ் flick ஷாட் அடிப்பது முக்கியமான ஒன்று தான்.” என்று கூறியுள்ளார் கனேரியா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here