தோனி இந்த இரண்டு விஷயத்தில் எப்பொழுதும் கவனமாக இருப்பார் ; இதில் மட்டும் தவறு நடந்தால் அவ்வளவு தான் ; ஸ்ரீதர் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் தோனியை பற்றியும் அவர் செய்த முக்கியமான இரண்டு விஷயங்களை பற்றிம் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பது தான் உண்மை. கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆன தோனி சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தது மட்டுமின்றி அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணி மட்டும் தான் இதுவரை அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி என்றால் பேட்டிங் மற்றும் பவுலிங் தான். ஆனால் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுதும் பீல்டிங் -ல் கவனம் செலுத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதர் கூறுகையில் ; “தோனி ஒரு கேப்டனாக விளையாடிய போது பீல்டிங் மற்றும் ரன் ஓடி எடுப்பதால் எனக்கு அணிக்கு பயிற்சி கொடுப்பது சுலபமாக மாறியது. அதுமட்டுமின்றி, தோனிக்கும் பீல்டிங் மற்றும் விக்கெட்களுக்கு இடையே ரன்களை அடிப்பதில் மட்டும் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது.”

“அதுதான் சரியான விஷயம். போட்டியின் போது அனைவரும் பீல்டிங் செய்தால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். தோனிக்கு பிறகு அதனை விராட்கோலி சிறப்பாக அணியை வழிநடத்தி சென்றார். இதனை பற்றி எப்பொழுதும் ரவி என்னிடம் 11 வீரர்களும் பீல்டிங் செய்து வருகின்றனர் என்று சொல்லுவார் .”

ஆனால் இப்பொழுது பீல்டிங் யாரும் பெரிய அளவில் செய்வது இல்லை. இருப்பினும் ஒரு சிலரின் சிறப்பான பீல்டிங் பற்றி பேசிய ஸ்ரீதர் ; “உமேஷ் யாதவ், முகமத் சிராஜ் மற்றும் மோஹித் சர்மா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அவர்களது பீல்டிங் சிறப்பாக இருக்கும். இப்பொழுது விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ,எ மனிஷ் பாண்டே போன்ற வீரர்களில் மைதானத்தில் இருக்கும்போது எப்பொழுது பீல்டிங் ஒரு நகைச்சுவை இருக்கும்.”

“அதுமட்டுமின்றி யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், கெதர் ஜாதவ் போன்ற வீரர்கள் கடுமையாக வேலை செய்து விளையாடி வந்தனர். இவர்களுடன் நான் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் ஸ்ரீதர்.”