ராகுல் டிராவிட் இல்லை ; இவர் தான் என்னுடைய பயிற்சியாளர் ; சிரித்து கொண்டே பேசிய சூரியகுமார் யாதவ் ; முழு விவரம் இதோ ;

0

ராகுல் டிராவிட் இல்லை ; இவர் தான் என்னுடைய பயிற்சியாளர் ; சிரித்து கொண்டே பேசிய சூரியகுமார் யாதவ் ; முழு விவரம் இதோ ;

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு டி-20 போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றனர். அதனால் இன்றைய போட்டியில் அணிதான் தொடரை கைப்பற்ற உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதில் இந்திய அணியை ஹர்டிக் பாண்டியவும், நியூஸிலாந்து அணியை மிச்சேல் சண்டனர் -ரும் தலைமை தாங்கி வழிநடத்த உள்ளனர்.

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் :

கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனவர் சூரியகுமார் யாதவ். அவரது வருகை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியது தான் உண்மை. ஆமாம், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக திகழ்ந்து வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

இதுவரை நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 47,26 ரன்களை அடித்துள்ளார். இதுவரை 47 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடிய யாதவ் 1651 ரன்களை அடித்துள்ளார். அதில் 13 அரைசதம் மற்றும் 3 சதம் அதில் அடங்கும். அதுமட்டுமின்றி, ஐசிசி டி-20 வீரர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார் சூரியகுமார் யாதவ்.

சமீபத்தில் சூரியகுமார் யாதவ் அளித்த பேட்டியில் நகைச்சுவையாக பேசியுள்ளார். அதில் “ நான் எப்பொழுதும் யுஸ்வேந்திர சஹால் சொல்வதை தான் கேட்பேன். அதிலும் கடந்த சீரியஸ் தொடரில் அவர் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன். இன்னும் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய பேட்டிங் பயிற்சியாளர் அவர் தான் என்று கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.

இந்திய கிரிக்கெட் அணி டி-20 போட்டிகளில் பலமாக இருக்க சூரியகுமார் யாதவின் பங்களிப்பு முக்கியமான காரணமாக இருக்குமா ? சூரியகுமார் யாதவ் இல்லையென்றால் இந்திய அணியின் மிடில் வலுவாக இருக்குமா ? உங்கள் அன்பான கருத்தை மறக்காமல் கீழே கமெண்ட்ஸ் பண்ணுங்க..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here