வீடியோ : சத்தம் போட்டது தப்பா ? கொஞ்சம் கூட நியாயமே கிடையாது ; மைதானத்தில் நடந்த வினோத செயல் ; சாம் கரண் செய்த செயல் வைரல் ;

வீடியோ : சத்தம் போட்டது தப்பா ? கொஞ்சம் கூட நியாயமே கிடையாது ; மைதானத்தில் நடந்த வினோத செயல் ; சாம் கரண் செய்த செயல் வைரல் ;

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வென்று தொடரையும் வென்றுள்ளது தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பவும பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. ஆனால், ஹார்ரி புரூக் மற்றும் ஜோஸ் பட்லர், மொயின் அலி போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்து அணிக்கு ரன்கள் குவிந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 342 ரன்களை அடித்துள்ளனர். இதில், ஜேசன் ராய் 9, டேவிட் மலன் 12, டுக்கெட் 20, ஹார்ரி புரூக் 80, ஜோஸ் பட்லர் 94*, மொயின் அலி 51 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்னு 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு தீரில் வெற்றி காத்திருந்தது.

ஆமாம், தொடக்க வீரர் மற்றும் கேப்டனான பவும அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின்பு விளையாடிய ரஷ்ஷிய வான் டெர் டுசென் ,ஐடென் மார்க்ரம், க்ளாஸென், டேவிட் மில்லர் போன்றவ் வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் 49.1 ஓவர் முடிவில் 347 ரன்களை அடித்த தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

சாம் கரண் செய்த மோசமான செயல் இணையத்தை கலக்கி வருகிறது ;

சரியாக 27.1 ஓவரில் சாம் கரண் பவுலிங்கை எதிர்கொண்டார் தென்னாபிரிக்கா அணியின் பவும. அப்பொழுது எதிர்பாராத வகையில் போல்ட் அவுட் ஆனார். அதனை கொண்டாடும் வகையில் பவும மூஞ்சியின் முன்பு விக்கெட்டை கைப்பற்றிய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இதனை கண்டிக்கும் விதமாக அந்த போட்டியில் சாம் கரனுக்கு கிடைக்கும் தொகையில் இருந்து 15% அபதாரமாக கொடுக்க வேண்டுமென்று ஐசிசி அறிவித்துள்ளது.

எப்பொழுதுமே விக்கெட்டை கைப்பற்றும் பவுலர்கள் இது போன்ற விஷயங்கள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை பற்றி உங்களுடைய கருத்து என்ன ? சாம் கரன் செய்தது சரியா ? தவறா ?