இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி ரஞ்சியில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி.

போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு பார்ட்னெஷிப் மட்டுமின்றி தொடக்க ஆட்டமும் சிறப்பாக அமைந்தது.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 176 ரன்களை அடித்தது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. அதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 52, பின் ஆலன் 35, டேரில் மிச்சேல் 59* ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஏனென்றால், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் ரன்களை அடிக்க முடியாமல் போனது.
அதனால் இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 155 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து.

கடுப்பான ஹர்டிக் பாண்டிய : காரணம் இதுதான் :
டி-20 போட்டி என்று வந்தால் போதும் அர்ஷதீப் சிங் நோ -பால் வீசாமல் இருப்பதே இல்லை. ஆமாம், நேற்று நடந்த முதல் டி-20 போட்டியில் இறுதியாக பவுலிங் செய்த அர்ஷதீப் சிங் முதல் பந்தையே நோ-பால் வீசினார்.
அதில் மிச்சேல் சிக்ஸர் அடித்தார். பின்னர் இறுதி ஓவர் முடிவில் 27 ரன்களை நியூஸிலாந்து அணி அடித்துள்ளது (அர்ஷதீப் சிங் ஓவரில்). ஒருவேளை அர்ஷதீப் சிங் ரன்களை கட்டுப்படுத்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கலாம்.
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) January 28, 2023
19.1 பந்தை நோ-பால் ஆக வீசினார் அர்ஷதீப் சிங். அதனை பார்த்த ஹர்டிக் பாண்டிய வேதனையோடு வானத்தை பார்க்கும் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) January 28, 2023
0 Comments