இந்திய கிரிக்கெட் அணியில் இவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது ; முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கைக்வாட் பேட்டி ;

இவரை யாரும் நெருங்க கூட முடியாது..! இந்திய கிரிக்கெட் வீரரை புகழ்ந்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கைக்வாட்.

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றனர். அதில் முதல் போட்டியில் இந்திய அணி 574 ரன்களை அதுவும் முதல் இன்னிங்ஸ்-ல் கைப்பற்றியது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி இரு இன்னிங்ஸ்- ல் விளையாடி 352 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தனர்.

அதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாமல் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் ட்ரா செய்தால் போதும் தொடரை சுலபமாக கைப்பற்றிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமின்றி, இது இந்திய அணியை விட இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி-க்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். ஆமாம், ஏனென்றால் இதுவரை விராட்கோலி 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விராட்கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

அதனால் பல வீரர்கள் விராட்கோலியின் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டு வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பயிற்சியாளரான அன்ஷுமன் கைக்வாட் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ” 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.

விராட்கோலி-க்கு இது மிகப்பெரிய சாதனை தான், இன்னும் அதிக போட்டிகளில் அவர் விளையாட வேண்டும்.100 போட்டிகளில் விளையாடி பல அனுபவங்களை பெற்றுள்ளார் விராட்கோலி. அதுமட்டுமின்றி, அவர் இன்னும் பிட்னெஸ் சரியாக வைத்து கொண்டு வருகிறார், அவரை யாராலும் நெருங்கவே முடியாது.

விராட்கோலி எப்பொழுதும் அவரது பிட்னெஸ்-ல் கவனமாக இருப்பார், அதில் ஒன்றும் ஆர்ச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏன் விராட்கோலி 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் ஆர்ச்சரியம் இல்லை. இப்பொழுது அடுத்த கேள்வியே அவர் (விராட்கோலி) அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா ?? என்பது தான்.

ஆனால் விராட்கோலி நிச்சியமாக 200 டெஸ்ட் போட்டியை நெருங்குவார் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு தெரிந்து விராட்கோலி பிட்னெஸ் ஆக தான் உள்ளார். அதனால் நிச்சயமாக இன்னும் 10 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.