CSK-யின் தொடர் வெற்றி இதுதான் காரணம்…! உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளெமிங்

12வது ஐபிஎல் 2021 லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி வரை போராடி 143 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் சிஎஸ்க் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

போட்டிக்கு பின்பு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் -னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிளெமிங் ; எங்களது தொடர் வெற்றிக்கு நாங்கள் எங்கள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்ற அனைத்து போட்டிகளையும் கவனித்து வருகிறோம். பிட்ச் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது, ஸ்பின்னர் பவுலிங்-க்கு நேற்று மும்பை வான்கடே மைதானம் ஒத்துழைத்துள்ளது.

அதனால் ஜடேஜா மற்றும் மொயின் அலியால் முக்கியமான விக்கெட்டை கைப்பற்ற முடிந்தது. தோனி பேட்டிங் பொசிஷன் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு ; இல்லை இல்லை தோனி இறுதியாக தான் பேட்டிங் செய்வார். ஒருவேளை ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அவர் முன்னாடியே பேட்டிங் செய்யக்கூடும். அது சூழ்நிலைக்கு ஏற்ப தோனி முடிவு செய்வார் என்று கூறியுள்ளார் பிளெமிங்.

ருதுராஜ் -க்கு பதிலாக வேற வீரர் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது என்று கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங் ;; இல்லை அவர் நிச்சியமாக விளையாடுவார். மூன்று போட்டிகள் தான் முடிந்துள்ளது, அதனால் இதனை வைத்து அவரை பற்றி பேச முடியாது. அவர் நிச்சயமாக நல்ல பேட்டிங் செய்வார் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெமிங்.