விராட்கோலி-க்கு பதிலாக இவர் அணியில் விளையாடுவாரா ? என்ன சொல்றிங்க ? கடுப்பான பயிற்சியாளர் ;

இன்று இரவு 7 மணியளவில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை நடந்து முடிந்த இரு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.

அதனால் இன்றைய போட்டி ஒன்றும் இந்திய அணிக்கு முக்கியமில்லை. அதனால் அணியில் விளையாடாத சில வீரர்களுக்கு இன்று நிச்சியமாக வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட்கோலி:

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக களமிறங்கி ரன்களை அடித்து விளாசியுள்ளார். இதுவரை 70 சதம் அடித்த விராட்கோலியால் கடந்த மூன்று ஆண்டுகளாக 71வது சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் என்பது தான் உண்மை. அதனால் அவரது விளையாட்டு முடிந்துவிட்டதா ?

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு இடம்கிடைக்குமா ? விராட்கோலி இல்லையென்றால் மாற்று வீரர் யாராக இருக்க முடியும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான விராட்கோலியின் சிறுவயது பயிற்சியாளரான : “எனக்கு தெரிந்து விராட்கோலி இடத்தை நிச்சியமாக இன்னும் சில நாட்கள் யாராலும் பிடிக்க முடியாது. அதேநேரத்தில் அந்த இடத்தில் (3வது) இளம் வீரர்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.”

“அந்த இடத்தில் விளையாடுவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை, அதுமட்டுமின்றி விராட்கோலியின் இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தான் இடம்பெறுவார் என்று அர்த்தமும் இல்லை. வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக சில முறை அவரால் (விராட்கோலி) பேட்டிங் செய்ய முடியாமல் போகிறது. அதிலும் குறிப்பாக ஷார்ட் -பிட்ச் பவுலிங்கில் தான்.”

“அதனால் எனக்கு தெரிந்து விராட்கோலி 4வது அல்லது 5வதாக பேட்டிங் செய்ய களமிறங்கினால் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் ராஜ்குமார் சர்மா.” விராட்கோலி இந்திய அணியில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக யார் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

ஸ்ரேயாஸ் ஐயர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்தில் மட்டுமே அதிரடியாக விளையாடி வரும் நிலையில், இவரால் எப்படி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியும் ?? விராட்கோலி-க்கு மாற்று வீரர் யார் ?