நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதி சுற்றில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் மற்றும் பார்ட்னெர்ஷிப் அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 188 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ஜெய்ஸ்வால் 3, பட்லர் 89, சஞ்சு சாம்சன் 47, படிக்கல் 28 ரன்களை அடித்தனர்.
பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. தொடக்க வீரரான சஹா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் சுமன் கில், மதியூ வெட் , ஹர்டிக் பாண்டிய மற்றும் டேவிட் மில்லர் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் குஜராத் அணி 19.3 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்தது.
அதில் சுமன் கில் 35, வெட் 35, ஹார்டிக் பாண்டிய 40 மற்றும் டேவிட் மில்லர் 68 ரன்களை அடித்துள்ளனர். அதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்பொழுது இருக்கும் நிலைமையை பார்த்தால் இறுதி போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று கோப்பை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி முடிந்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டிய கூறுகையில் ; “என்னுடைய வாழ்க்கையில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டு தான் வருகிறேன். என்ன நடந்தாலும், இறுதியாக என்னுடைய குடும்பம், பையன், மனைவி மற்றும் என்னுடைய சகோதரன் தான் இறுதியாக இருப்பார்கள்.”
“அவர்கள் தான் நான் எப்பொழுதும் சம நிலைக்கு இருக்க உதவியாக இருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு சென்று என்னுடைய குடும்பத்துடன் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு தெரிந்து இதுதான் என்ன ஒரு கிரிக்கெட் வீரராக வைத்துள்ளது. எங்கள் அணியில் இருக்கும் அனைத்து 23 வீரர்களின் குணமும் வேறு விதமாக தான் இருக்கும்.”
“நம்மை சுற்றி நல்லவர்கள் இருந்தால் நிச்சியமாக நல்லது தான் நடக்கும். நான் சில வற்றை கவனித்துள்ளேன். நாங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது விளையாடாத சில வீரர்களும் விளையாடும் வீரருக்காக வேண்டுவதை நான் பார்த்துள்ளேன். அதனால் தான் நாங்கள் இந்த ஆண்டு நினைத்த இடத்தில் நினைத்தபடி உள்ளோம்.”
“ஆனால் ரஷீத் கான் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இந்த போட்டியில் மட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி டேவிட் மில்லரின் பேட்டிங் மிகவும் அருமையாக உள்ளது. அவரை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.”