இவர் அணியில் இல்லாததால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ; இயன் சாப்பல் ஓபன் டாக் :

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளனர்.

அதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வென்றுவிடும். அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் இந்திய கிரிக்கெட் அணி முன்னேறிவிடும்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் இவர் இல்லாதது பின்னடைவா ?

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் ரிஷாப் பண்ட் -க்கு சமீபத்தில் தான் கார் விபத்து ஏற்பட்டது. அதனால் குறைந்தது 18 மாதங்கள் அவரால் எந்த விதமான போட்டிகளிலும் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இந்திய அணியின் பினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர் இடத்தில் யார் சிறப்பாக விளையாட போகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. ரிஷாப் பண்ட் இல்லாதது தான் இந்திய அணிக்கு பின்னடைவு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான இயன் சாப்பல் கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய இயன் சாப்பல் கூறுகையில் : “இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய மாற்றம் என்றால் அது ரிஷாப் பண்ட் இல்லாதது தான். இப்பொழுது தான் ரிஷாப் பண்ட் -ன் முக்கியத்துவம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.”

முன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்ன ? ரிஷாப் பண்ட் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவா ? இயன் சாப்பல் சொன்னது போல் ரிஷாப் பண்ட் இல்லாதது காரணமா ?