இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.
அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய. இதனை தொடர்ந்து நாளை காலை 9:30 மணியளவில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்திய அணியும் உலகக்கோப்பையும் :
தோனி கேப்டன் பதவியில் விலகியதால் இருந்து இந்திய கிரிக்கெட் அணியால் கோப்பையை வெல்ல முடிவதே இல்லை. என்னதான் இந்திய கிரிக்கெட் தவரிசை பட்டியலில் டாப் இடங்களில் இருக்கிறது. அதேபோல மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த ஆசிய மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியுள்ளது இந்திய. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 2023 இறுதியில் அதுவும் இந்தியாவில் ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற இருக்கிறது.
அதனால் எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணி இதில் வெல்ல வேண்டுமென்று அனைத்து விதமான முயற்சிகளையும் கையில் எடுத்து வருகின்றனர்.
அடிக்கடி காயம் காரணமாக வெளியேறி வரும் இந்திய வீரர்கள் :
கடந்த அண்ட் இறுதியில் டி-20 உலகக்கோப்பை போட்டியில் காயம் காரணமாக பும்ரா இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது. அதேபோல தான் இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் முன்னணி பவுலர் காயம் காரணமாக விளையாட போவதில்லை என்ற சேத்தி வெளியாகியுள்ளது.
ஆமாம், இந்திய அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார் பிரஷித் கிருஷ்ணா. சிறப்பாக பவுலிங் செய்து வரும் பிரஷித் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அடிக்கடி போட்டிகளில் விளையாடுவது உண்டு. ஆனால் பிரஷித் கிருஷ்ணாவுக்கு Stress Fracture காரணமாக குறைந்தது 6 மாதங்கள் எந்த விதமான போட்டிகளிலும் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கார் விபத்தில் சிக்கிய ரிஷாப் பண்ட் -ஐ தொடர்ந்து இப்பொழுது பிரஷித் கிருஷ்ணா வெளியேறியது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது…!