இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தால் கொரோனா சும்மாவிடாது போல ; பாவம் sir இந்த பையன் ; முழு விவரம் இதோ ;

0

நேரம் காலம் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று அனைவரும் சொன்னது உண்மை தான் போல. ஆமாம் , இவருக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. அட்டகாசமான திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். சமீபத்தில் தான் 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிமுகம் செய்தது பிசிசிஐ. அதில் ரவி
பிஷோனி க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆமாம்..! ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்ம ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆமாம் ..! கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்தார் ருதுராஜ். மொத்தம் 16 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் 635 ரன்களை அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.

பின்னர் இந்தியாவில் நடைபெறும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நான்கு போட்டிகளில் மூன்று சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ருதுராஜ். உண்மையை சொல்ல போனால், கடந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த ஒரே வீரராக ருதுராஜ் கெய்க்வாட் திகழ்ந்தார்.

இப்படி பட்ட வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதா என்று கேட்டால் அது இல்லை என்பது தான் உண்மை. ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இடம்பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட் ஆனால் அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

பின்னர், சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றார். ஆனால் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here