இவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய கிரிக்கெட் அணி திணறுகிறது ; தாக்கு பிடிக்குமா இந்திய ?

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய.

இதனை தொடர்ந்து நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

முதல் நாள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 255 ரன்களை அடித்துள்ளது ஆஸ்திரேலியா. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளில் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது ஆஸ்திரேலியா.

இதில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார். 312 பந்தில் 129 ரன்களை அடித்திருக்கிறார். இவரது (கவாஜா) விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய அணியின் பவுலர்கள் திணறிக்கொண்டு வருகின்றனர்.

ஆமாம், 4 விக்கெட்டை இழந்தாலும் கேமரூன் க்ரீன் மற்றும் கவாஜா பார்ட்னெர்ஷிப் செய்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை என்றால் நிச்சியமாக 400க்கு மேற்பட்ட ரன்களை ஆஸ்திரேலியா அணி அடித்துவிடும்.

இந்திய கிரிக்கெட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமத் ஷமி, அக்சர் பட்டேல், போன்ற வீரர்கள் இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறுகிறது.

ஸ்கோர் விவரம் :

108 ஓவர் முடிந்த நிலையில் 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி 301 ரன்களை அடித்துள்ளனர். அதில் டிராவிஸ் ஹெட் 32, உஸ்மான் கவாஜா 133*, மரன்ஸ் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் 17, கேமரூன் க்ரீன் 66* ரன்களை அடித்துள்ளனர்.

அதேநேரத்தில், பவுலிங் செய்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா 21 ஓவர் பவுலிங் செய்து 52 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 1 விக்கெட்டையும், ஷமி 20 ஓவர் பவுலிங் செய்து 69 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here