என்ன நடக்கிறது என்று, ரவி சாஸ்திரி-க்கு நன்கு தெரியும் ; இப்படியெல்லாம் பேசினால் கண்டிப்பாக நியாயம் இல்லை ; ரோஹித் ஓபன் டாக்;

0

IND vs AUS : நாளை காலை 9:30 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் நான்காவது டெஸ்ட் போட்டியில் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருக்கின்றனர்.

அதனால் நான்காவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் முன்னேறிவிடும். அதனால் இறுதி டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

இதையும் படியுங்க : இந்திய அணிக்கு சாதகமாக மாறிய முடிவுகள் ; அப்போ பாகிஸ்தான் அணிக்கு ஆபத்தா ?

இந்திய அணிக்கு எதிர்ப்பு :

முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வெற்றியை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது டெஸ்ட் போட்டி மோசமான தோல்வியாக மாறியது. ஆமாம், பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தால் விக்கெட்டை இழந்த இந்திய அணி தோல்வியடைந்தது.

அதனால் இந்திய அணியை பற்றி பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி : “முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணிக்கு அதிகநம்பிக்கை வந்துருக்கும்.” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் : “எப்பொழுது இரு போட்டிகளில் வென்றால் எங்களுக்கு அதிக நம்பிக்கை வந்திருக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது முட்டாள் தனம். ஏனென்றால், இரு போட்டிகளில் மட்டுமின்றி அந்த தொடர் முழுவதிலும் வெல்ல வேண்டுமென்று தான் நினைப்போம்.”

“இரு போட்டிகளில் வென்ற பிறகு யாரும் சும்மா இருக்க போவதில்லை. அதுவும் இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம்-ல் இல்ல நபர்கள் அதிக நம்பிக்கை என்று சொல்பர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்றே தெரியாது.”

“நாங்கள் எப்பொழுது எதிர் அணிக்கு சவாலாக தான் இருப்போம். அணிக்கு வெளியே இருக்கும் சில எங்களுக்கு (இந்திய வீரர்கள்) அதிக நம்பிக்கை என்று நினைத்தால் எங்களால் எதுவும் செய்ய முடியாது.”

“அதுமட்டுமின்றி, ரவி சாஸ்திரிக்கு இங்கு உள்ளே என்ன நடக்கிறது, டிரெஸ்ஸிங் ரூமில் என்ன பேசுவோம் என்று நன்கு தெரியும். அப்படி இருக்கும் நேரத்தில் இவர் பேசியது சரியானதாக இல்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here