வீடியோ ; இப்படியெல்லாம் விக்கெட் போகுமா ?? அதுவும் இஷான் கிஷானுக்கு இந்த நிலைமையா ? அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

ஐபிஎல் 2022 : ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை 37 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், லக்னோ அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இதில் மிகவும் மோசமான நிலை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமே. ஏனென்றால் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்று மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது. ஆமாம், ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த 14 சீசன்களில் அதிக முறை கோப்பையை வென்ற ஒரே அணி மும்பை மட்டும் தான்.

இதுவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும் மும்பை அணி இந்த ஆண்டு போட்டியில் விளையாடுவதை பார்த்த மும்பை ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி.

அந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த லக்னோ அணி சிறப்பாக விளையாடி 168 ரன்களை அடித்தனர். பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் 8வது ஓவர் பவுலிங் செய்தார் லக்னோ அணியின் பவுலர் பிஷ்னோய் , அதனை எதிர்கொண்டார் இஷான் கிஷான்.

அப்பொழுது அவர் அடித்த பந்து பேட்டின் எட்ஜ்-ல் பட்டு, விக்கெட் கீப்பர் காலில் பட்டு அதனை கேட்ச் செய்தார் ஹோல்டர். பந்து நிலத்தில் படாமல் விக்கெட் கீப்பர் (டி-காக்)காலில் பட்டதால் விக்கெட்டை இழந்தார் இஷான் கிஷான். இப்படியெல்லாம் விக்கெட் போகுமா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

இனிவரும் போட்டிகளில் ஆவது மும்பை இந்தியன்ஸ் அணி போட்டிகளில் வெல்லுமா ??? மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகின்றது. அதனால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!