CSK அணிக்கு இருக்கும் முக்கியமான Weakness இது மட்டும் தான் ; இதனை சரி செய்தால் சென்னை அணிக்கு தோல்வியே இல்லை ;

ஐபிஎல் 2022 போட்டிகளில் சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆமாம், இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக சென்னை அணி வெல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஆமாம், இன்னும் 7 போட்டிகள் சென்னை அணிக்கு மீதமுள்ள நிலையில் அவரை அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் கனவு நினைவாகும். இருப்பினும் இதுவரை நான்கு முறை சாம்பியன் படத்தை வென்ற சென்னை அணிக்காக இந்த நிலை ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளது. அதனை மட்டும் சரி செய்தால் நிச்சியமாக சென்னை அணியை அசைக்கவே முடியாது. ஓப்பினிங் பார்ட்னெர்ஷிப் ; ஐபிஎல் தொடக்க முதல் போட்டியில் இருந்து இதுவரை சென்னை அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.

அதுமட்டுமின்றி,கடந்த ஆண்டு போல ருதுராஜ் கெய்க்வாட் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. ஒருவேளை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினாலும், ராபின் உத்தப்பா ஆட்டம் இழந்து விடுகிறார். சிறப்பான பார்ட்னெர்ஷிப் தொடக்கத்தில் அமைந்தால் நிச்சியமாக சென்னை அணியை அசைக்கவே முடியாது.

பவுலிங் ; சென்னை அணி முதல் 6 ஓவர்கள் சிறப்பாக தான் பவுலிங் செய்து வருகிறார். இருப்பினும், போக போக அதிக ரன்களை கொடுப்பதால் சென்னை அணிக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. அதில் முகேஷ் சவுத்திரி தொடக்கத்தில் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றி வருகிறார். ஆனால், அதன்பின்னர் ரன்களை அதிகமாக கொடுப்பதால் விக்கெட்டை கைப்பற்றியதற்கு பயனில்லாமல் போய்விடுகிறது.

கேப்டன் ; மகேந்திர சிங் தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தி வருகிறார் ரவீந்திர ஜடேஜா. கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரவீந்திர ஜடேஜா பவுலிங் மற்றும் பீல்டிங், பேட்டிங் போன்ற விஷயங்கள் மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறார்…!

பீல்டிங் : இது நம்ம சென்னை அணியா ?? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முன்பு சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டூப்ளஸிஸ் போன்ற வீரர்களின் பீல்டிங் மிகவும் அட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கடந்த சில போட்டிகளாகவே சென்னை அணி சரியாக பீல்டிங் செய்யவில்லை.

அதுமட்டுமின்றி, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, முகேஷ் சவுத்திரி, ப்ராவோ போன்ற வீரர்கள் சரியாக கேட்ச் செய்வதில்லை. இதனை மட்டும் சரி செய்தால் நிச்சியமாக போட்டிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்த முறை சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!