இப்படி எந்த அணி செய்கிறதோ, அந்த அணிதான் ஐபிஎல் போட்டிகளில் வெல்ல முடியும் ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ;

நேற்று நடந்த 37வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம் போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 168 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 103, மனிஷ் பாண்டே 22, தீபக் ஹூடா 10 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கயது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்க வீரரான இஷான் கிஷான், கடந்த சில போட்டிகளில் பெரிய அளவில் எதிர்பார்த்த படி விளையாடவில்லை என்பது தான் உண்மை. இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 132 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தனர்.

அதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. 8 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றியை கைப்பற்றிய லக்னோ அணி புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் :

“நான் அனைத்து ஓவரில் முடிந்த வரை ரன்களை அடிக்க முயற்சி செய்து கொண்டு தான் இருந்தேன். சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நான் விளையாட தொடங்கினேன். அதற்கான முடிவு தான் இன்றைய போட்டியின் இறுதியில் கிடைத்தது. பேட்டிங் மட்டுமின்றி எனக்கு கொடுத்த பொறுப்பையும் நான் சந்தோசமாக மகிழ்விக்கிறேன்.”

“எந்த அணி பவர் ப்ளே-வில் சரியாக பேட்டிங், பவுலிங் செய்கிறதோ மற்றும் இறுதி ஓவரில் அதிரடியாக விளையாட போகிறதோ, அந்த அணிதான் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் வெல்ல முடியும். இந்த முறை மெகா ஏலத்தில் நாங்கள் சிறப்பாக முடிவு செய்து தான் வீரர்களை தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”