இந்த ஆண்டு 2020 ஐபிஎல் ஆரம்பித்து சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் அதுகம் ரசிகர்களை கொண்ட ஒரே விளையாட்டு ஐபிஎல் என்றே சொல்லலாம். 2008 ஆம் ஆரம்பித்த இந்த ஐபிஎல் போட்டி இப்பொழுது வரை எதிர்பார்ப்புகளை தாண்டி பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் நடந்து வருகின்றன.
இன்றைய போட்டி: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளன. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2020யில் இதுவரை 6 போட்டிகள் விளையாடிய சென்னை அணி 4 போட்டியில் தோல்வியையும் 2 போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் கோபத்துடன் இருக்கின்றன. அதுமட்டுமின்றி கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பந்துகளை வீணடித்து விட்டதால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது என்று பல ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.
கேதர் ஜாதவ் கடந்த 6 போட்டியில் வெறும் 50 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதனால் இன்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக முரளி விஜய் அல்லது வேறு ஏதேனும் புதிய இளம் வீரரை எதிர்பார்க்கலாம்.
ஒரு ஒரு பக்கம் இருக்க சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்; கேதர் ஜாதவை அணியில் இருந்து மாற்ற முடியாது. ஏனென்றால் அவரால் தான் 4வது இடத்தை பூர்த்தி செய்ய முடியும். அதுமட்டுமின்றி சூழல் பந்து வீச்சாளர்களின் எதிர்கொள்ளவர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக வேற ஒரு வீரர் விளையாடுவாரா?? அல்லது அதே வீரர் தான் இருக்கப்போகிறாரா!! என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!