முன்னால் ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் அவரது வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெள்ளிக்கிழமை (9-10-2020) இரவு 7:15 மணியளவில் அவரது மகன் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸ்க்கு தகவல் அளித்துள்ளார்.
இதுவரை அவர் 72 போட்டிகள் விளையாடியுள்ளார் அதில் 1,657 ரன்களையும் 196 விக்கெட்களைஎடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் குமார் இதுவரை 52 போட்டிகள் கேரளா அணியிலும் , 17 போட்டிகள் ரயில்வே அணியிலும் விளையாடியுள்ளார்.
அவரது 13 வயதில் அவர் நல்ல ஒரு பௌலர்மட்டுமின்றி நல்ல ஒரு கிரிக்கெட் வீரராக திகழ்ந்துள்ளார். ரஞ்சி போன்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் இந்தியா அணியில் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. ராகுல் டிராவிட் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.