ஐபிஎம்2021 இந்த 4 பேரில் ஒருவர் தான் அதிக விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பு உள்ளது..! யார் அந்த 4 வீரர்கள்..முழு விவரம் இதோ..!

0

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இந்தியாவில் ஐபிஎல் 2021 பல பாதுகாப்பான விதிமுறையை பின்பற்றி ஆரம்பித்தது ஐபிஎல் டி-20 லீக் போட்டி. ஆனால் எதிர்பார்த்த விதமாக அதில் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியானது. அதனால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

பின்பு அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வலி அனுப்பிவைத்துள்ளார். மீதமுள்ள போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்ற பல கேள்விகள் இருந்தது. ஆனால் இப்பொழுது அது உறுதியாகிவிட்டது. அதில் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ உறுதியான முடிவை எடுத்துள்ளது.

ஹர்ஷல் பட்டேல் :

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டை எடுக்கும் பட்டியலில் இப்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 17 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அவேஷ் கான் :

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த பவுலிங்கை செய்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய 14 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இவருடைய பந்து வீச்சு கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் மிகப்பெரிய மாற்றம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய அரபு நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் ஒன்னும் மிகப்பெரிய மாற்றம் இருக்காது. அதனால் நிச்சியமாக அவேஷ் கான் கேம் பிளான் ஒரே மாதிரி தான் இருக்கும்.

ரஷீத் கான் :

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை சேர்ந்த ரஷீத் கானுக்கு அதிகம் வாய்ப்புள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 10 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுவும் ஒரு ஓவருக்கு குறைத்து 6.14 என்ற விகிதத்தில் ரன்களை கொடுத்துள்ளார்.

இப்பொழுதுமித்தமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதுவும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு ஐக்கிய அரபு நாட்டில் விக்கெட்டை கைப்பற்றுவது மிகவும் சுலபம் தான். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020, ஐக்கிய அரபு நாட்டில் 16 போட்டிகளில் விளையாடிய ரஷீத் கான், 20 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காகிசோ ரபட :

டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சேர்ந்தவர் . கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதில் பந்து வீசிய இவர், 17 போட்டிகளில் விளையாடிய 30 விக்கெட்டை எடுத்து அதிக விக்கெட் எடுத்த விருதை பெற்றார்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இவருக்கு ஐக்கிய அரபு நாட்டில் எப்படி பவுலிங் செய்தால் விக்கெட் கிடைக்கும் என்று நன்கு தெரிந்த ஒருவர் , அதனால் இவர் மீண்டும் அதிக விக்கெட்டை எடுக்கும் வைப்பு அதிகம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here