CSK-க்கு மட்டுமே அடிச்ச அதிர்ஷ்டம்..!! வேறு எந்த அணிக்கும் இந்த மாதிரி அமையவில்லை ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021: ஐந்து மாதங்கள் கழித்து இப்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் போட்டி, 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது. அதனால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ .

இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதுவரை இந்த இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 19 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 12 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் இன்றைய போட்டி நிச்சியமாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐபிஎல் போட்டிகள் ஐந்து மாதங்கள் கழித்து இப்பொழுது மீண்டும் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதிலும் ஐபிஎல் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சில வீரர்கள் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகளில் விளையாட வரவில்லை. அதற்கான காரணம் ?

ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்த உடன் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அதே ஐக்கிய அரபு நாட்டில் தான் நடைபெற உள்ளது. அதனால் உலகக்கோப்பை போட்டிக்கு பயிற்சி செய்ய வேண்டும் என்று அவரவர் காரணத்தை சொல்லி ஐபிஎல் 2021 போட்டிகளில் விளையாட வரவில்லை.

அதனால் ஐபிஎல் அணிகள் சிக்கலில் உள்ளனர். ஆனால் இந்த மாதிரி நிலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்படவே இல்லை. அதற்கான முக்கியமான காரணம் சிஎஸ்கே அணி தான். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் ஒரு குடும்பம் போல தான் விளையாடி வருகின்றனர்.

அதேபோல, மற்ற அணிகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு சிஎஸ்கே அணியில் ப்ளேயிங் 11ல் விளையாட வைத்துள்ளார் தோனி. அதனால் தான் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் தவறாமல் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டியில் விளையாட உள்ளனர்.