தோனி மற்றும்பிளெமிங் கருத்து; கேதர் ஜாதவ் ஏன் 4வது இடத்தில் விளையாடுகிறார்??? ரசிகர்களுக்கு அதிர்ச்சி !!!

0

தோனி மற்றும்பிளெமிங் கருத்து; கேதர் ஜாதவ் ஏன் 4வது இடத்தில் விளையாடுகிறார்??? ரசிகர்களுக்கு அதிர்ச்சி !!!

ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் 4 போட்டிகளில் தோல்வியையும் 2 போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த தோல்வியை கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் ரெய்னா மீண்டும் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த சென்னை அணியின் சிஈஓ காசி விஸ்வநாதன் , ரெய்னா ஐக்கிய அரபு நாட்டில் இருந்து இந்தியா திரும்பியது அவரது தனிப்பட்ட முடிவு அதனால் எங்கனால் எதும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.

அதுமட்டுமின்றி, 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் இந்த ஆண்டு 2020 உடன் நிறைவு பெற்றதால் ரெய்னாவுக்கு உடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேற்கொண்டு வருகிறது. இதனை கேட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் ரெய்னா ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த தோல்விக்கு , கேதர் ஜாதவ் தான் காரணம் அவருக்கு பதிலாக வேறு ஒரு இளம் வீரரை கொண்டு வர வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கூறிவந்தனர். ஏனென்றால் இந்த ஐபிஎல் 2020 போட்டியில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவ் 58 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் அவரது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. அதில் சென்னை அணிக்கு 4வது விக்கெட் இழந்த பிறகு கேதர் ஜாதவ் களம் இறங்கிய..நிறைய பந்துகளை அடிக்காமல் வெறும் ஒரு ஒரு ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் கேதர் ஜாதவ். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.

பிராவோ , ஜடேஜா இருக்கும் போது எதற்கு கேதர் ஜாதவ் இறங்கினார் ?? என்ற பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்.

கேதர் ஜாதவ் ஏன் 4வது இடத்தில் விளையாடுகிறார்??? ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார் !!! என்ன காரணம் தெரியுமா ???

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான போட்டியில் 4வது ஆக இறங்கிய கேதர் ஜாதவ் 12 பந்தில் வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனை குறித்து பேசிய ஸ்டீபன் பிளெமிங் கேதர் ஜாதவ் சூழல் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடுவார் அதனால் அவரை நம்பினோம். ஆனால் அது எதிராக மாறிவிட்டது. அணியில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த அணிதான் சென்னை அணிக்கு சிறப்பாக இருக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

அதனால் ஸ்டீபன் பிளெமிங் சொல்வதை கவனித்தால் அடுத்த ஆட்டத்தில் கேதர் ஜாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here