தோல்விக்கு இதுதான் காரணம் …. மனம் திறந்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்…!!!!

வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான வார்னர் 40 பந்தில் 50 ரன்களை மற்றும் ஜானி பேர்ஸ்டோ 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய மனிஷ் பாண்டே 1 ரன்களிலும் , பிரியம் கர்க் 0 ரன்களிலும், அபிஷேக் சர்மா 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து , 201 ரன்களை எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 202 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 69 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்கத்தில் விக்கெட் இழந்த பஞ்சாப் அணியால் ரன்களை எடுக்க முடியாமல் போய்விட்டது. தொடக்க வீரரான ராகுல் 11 ரன்களிலும், மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் இறங்கிய நிக்கோலஸ் பூரான் 37 பந்தில் 77 ரன்களை விளாசிய ஆட்டம் இழந்தார். மந்தீப் சிங் 6 ரன்களிலும் , முகமது சமி 0 ரன்களிலும் , அர்ஷிதீப் சிங் 0 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

16.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை பஞ்சாப் அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது.

இந்த தோல்வியை குறித்து கே.எல்.ராகுல் மனம் திறந்து பேசியுள்ளார்;;

பவர் பிளேயில் பிறந்தநாள் எங்களுக்கு மிகவும் கடினமாக போய்விட்டது . தொடர்ந்து விக்கெட் இழந்ததால் எங்க ஆட்டம் எதிர் அணியுக்கு மாறிவிட்டது. கடந்த ஐந்து போட்டிகளில் கடைசி ஓவர்களில் விளையாட முடியவில்லை என்று கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

நிக்கோலஸ் பூரன் மிகச்சிறப்பாக ஆட்டம் ஆடினார். தொடக்கத்தில் நல்ல ஒரு ஆட்டத்தில் வெளிப்படுத்திருந்தால் கண்டிப்பாக வெற்றியை அடைந்திருக்க முடியும். அணியில் உள்ள அனைவரும் நன்றாக விளையாடி வருகின்றன . அவரவர் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன, அதனால் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் .